spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி- ஓபிஎஸ்

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி- ஓபிஎஸ்

-

- Advertisement -

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி- ஓபிஎஸ்

தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்ததாக ஒ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

we-r-hiring

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத்தேர்தல்தான். இதற்கு காரணம் துரோகியும் துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகார கூட்டமும்தான். இரட்டை இலை சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அதிமுக ஈரோடு தேர்தலில் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம்

தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்தது” எனக் கூறியுள்ளார்.

MUST READ