Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

-

தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது பொதுச்செயலாளர் நியமனம், மூல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த மனு மீது 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க உத்தரவிட்டு டெல்லி ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் விதித்திருந்த 10 நாள் கெடு, வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து
தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பார் என்று தனது மனுவில் ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ