Homeசெய்திகள்தமிழ்நாடு"தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

சென்னையை அடுத்த ஒரகடத்தில் இன்று (ஜூன் 08) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூபாய் 762 கோடி மதிப்பில் தொழில் 4.0-வைத் தொடங்கி வைத்தார். டாடா நிறுவனத்துடன் இணைந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, புனேவின் டாடா டெக்னலாஜி நிறுவனத்துக்கும், தமிழக அரசின் வேலை வாய்ப்பு பயிற்சித் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி தொடர்ந்து இயங்க அனுமதி

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் மறைத்தாலும், சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது. யார் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன; புதிய தொழில்கள் தொடங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும், சூழ்நிலையும் இருக்கிறது. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மனித ஆற்றல், இளைய சக்தி தமிழகத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அமைதி மாநிலமாக இருக்கிறது என்பதால்தான் முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு தைரியம் இருந்தால் அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்- முரசொலி

இந்த விழாவில், டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ