spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு - கூட்டுறவுத்துறை

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு – கூட்டுறவுத்துறை

-

- Advertisement -

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு - கூட்டுறவுத்துறை
நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க படும் என கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது

பணியாளர்கள் உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறக்க வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தரவிட்டுருந்தது.

we-r-hiring

இருப்பினும், சில நியாயவிலைக் கடைகள் அரசின் உத்திரவை கடைபிடிக்காமல் உள்ளனர் . மக்களிடம் இருந்து புகார்கள் வந்த கொண்டே இருப்பதனால் மேலும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை கூட்டுறவுத்துறை அமல் படுத்து உள்ளது

குறிப்பாக, சென்னை மற்றும் புறநகரில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் செயல்பட வேண்டும்.

மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு உரிய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும். இதனை கடைப்பிடிக்காத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ