Homeசெய்திகள்தமிழ்நாடுபாலமேடு ஜல்லிக்கட்டு- 3ஆம் சுற்று முடிவு; 13 பேர் படுகாயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு- 3ஆம் சுற்று முடிவு; 13 பேர் படுகாயம்

-

- Advertisement -

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை 305 காளைகள், 115 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் நான்காவது சுற்றுக்கு 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

jallikattu

we-r-hiring

மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா காலை 7 மணிக்கு துவங்கியது. காலை ஏழு மணிக்கு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி அலுவலகத்தில் பரிசு பொருட்களுடன் கிராம மக்கள் ஊர்வலமாக வாடிவாசல் வந்தடைந்த உடன் முதல் கட்டமாக மடத்து கமிட்டி காளையும் அதனைத் தொடர்ந்து கிராமத்து மரியாதை காளைகள் ஆறும் அவிழ்த்து விடப்பட்டன. பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மொத்தம் ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன. அதேபோன்று வாடிவாசல் வழியாக வெளியேறும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதற்காக 335 மாடுபிடி வீரர்கள் தேர்வாகி விளையாடி வருகின்றனர்.

விழாவில் சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அதனை மடக்கிப்பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதேபோன்று ஜல்லிக்கட்டு விழாவில் சிறப்பாக அதிக காளைகளை மடக்கி பிடிக்கும் ஒரு மாடு பிடி வீரருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சொகுசு கார் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோன்று சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது.

தற்போது வரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி மணி என்பவர் முதலிடத்தில் உள்ளார்.11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாம் இடத்திலும், 9 காளைகளை அடக்கி வாஞ்சிநாதன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 13 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

MUST READ