திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அதிமுக கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கெட்சியாளின் கணவரான வசந்தகுமார் (39 ) என்பவர் தனது சித்தி சலோமி உடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று பின்னர் திருப்பாச்சூர் நோக்கி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் என்பவர் மது போதையில் தனது இருசக்கர வாகனத்தை திருப்பாச்சூர் -கடம்பத்தூர் நெடுஞ்சாலை நடுவில் நிறுத்தி வாகனங்களுக்கு வழிவிடாமல் தகராறு செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வசந்தகுமார் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனத்திற்கு வழி விடுமாறு அவரை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு விக்கி என்ற விக்னேஷ் மது போதையில் அவரை தரைக்குறைவாக பேசியது மட்டும் இன்றி உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் எனக் கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தடுமாறி கீழே விழுந்த வசந்தகுமாரின் இடது கை மீது விக்கி மிதித்ததில் அவர் கைமுறிவு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் வசந்தகுமாரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமார் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் தன்மீது கொலை முயற்சி மேற்கொண்ட விக்கி என்ற விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். போலீசார் முதல் கட்ட விசாரணையில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் விக்கி குடியிருக்கும் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவருக்கு தொலைபேசி மூலமாக பேசி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என ஏற்கனவே மிரட்டியதாக போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது
போலீசார் கைதுக்கு பயந்து விக்கி என்ற விக்னேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அவருடைய சகோதரர் பிரகாஷ் அதிகாரத்தில் மருத்துவமனையில் போலியாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.