spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

-

- Advertisement -

 

பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
File Photo

பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றை வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

we-r-hiring

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!

மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தில் கோயில் கட்டிடக் கலை ஆய்வாளர் தேவி தலைமையிலான குழுவினர், அந்த கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த கல்வெட்டு மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 43- ஆம் ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு எனத் தெரிய வந்தது.

பிற்கால பாண்டியர் மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சிக்காலம் குறித்த தகவல்களுடன் இந்த கல்வெட்டு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கல்வெட்டு, 1311- ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டதாகவும் முழு கல்வெட்டில் பாதி மட்டுமே இங்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

“அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு”- ரவீந்திர ஜடேஜா!

கால்வாய்க்கு அருகே பழமையான கல்வெட்டு இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்த ஆய்வு நடைபெற்றதாக ஆய்வாளர் தேவி குறிப்பிட்டுள்ளார்.

MUST READ