
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது முதன்முறையாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

“ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர்?”- குலாம் நபி ஆசாத் மறுப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் 4,500 ஏக்கரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்காக, ஏகனாபுரம் பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் 433-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கிராம சபைக் கூட்டங்களை நடத்தி விமான நிலையத் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பையும் பதிவுச் செய்தனர்.
குன்னூர் பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
இந்த நிலையில், விமான நிலையம் தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் நேற்று (அக்.01) ஆய்வு நடத்தச் சென்றனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கிராம மக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் மறியல் போராட்டத்தால் பேராசிரியர் தலைமையிலான ஐ.ஐ.டி. குழுவினர் சில இடங்களில் மட்டுமே ஆய்வு நடத்திவிட்டு, முழு ஆய்வையும் நடத்த முடியாமல் திரும்பிச் சென்றனர்.
காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!
இந்த நிலையில், ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்திய 138 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.