spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

-

- Advertisement -

 

"வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

we-r-hiring

வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷா

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.முக.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. சென்னையில் மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என அமைச்சர்கள் கூறினார்கள்.சென்னை வெள்ள பாதிப்புகளை தி.மு.க. அரசு பாடமாக எடுத்துக் கொள்ளாததால் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

தென் மாவட்ட மழை பாதிப்பை பார்க்காமல் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தலை நோக்கமாகக் கொண்டு மக்களை உதாசீனப்படுத்தியது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்; மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மேலமுறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து முறைப்படி அறிவிக்கப்படும்” என்றார்.

ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை கேட்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னையில் இருந்து சேலம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ