Homeசெய்திகள்தமிழ்நாடு"கட்சியினர் அனைவருக்கும் தி.மு.க. பொதுவானது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“கட்சியினர் அனைவருக்கும் தி.மு.க. பொதுவானது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

கூட்டத்தில், தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள், அனைத்து மாவட்டங்களின் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் விழாவைக் கொண்டாடுவது குறித்தும், அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க. அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது; நிர்வாகிகளுக்கு மட்டுமே சொந்தமில்லை. ஆட்சி அனைவருக்கும் பொதுவானது; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் கவனமுடன் பேச வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளார்.

MUST READ