Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு அரியர் தேர்வுகள் – டிசம்பர் 21-ம் தேதி தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு அரியர் தேர்வுகள் – டிசம்பர் 21-ம் தேதி தொடக்கம்!

-

- Advertisement -

2008, 2013, 2017 கல்வி விதிகளின்கீழ் படித்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: டிசம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் 2008, 2013 மற்றும் 2017-ம் ஆண்டு கல்வி விதிகளின்கீழ் இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து, பல்கலைக்கழகம் அனுமதித்த அதிகபட்ச காலக்கெடுவுக்குள் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு சிறப்பு அரியர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீதமுள்ள அரியர் பாடத் தேர்வுகளை எழுதுவதற்கான வாய்ப்பை இழந்த மாணவர்களின் கல்வி நலன் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிறப்பு அரியர் தேர்வுகளுக்கு நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கால அட்டவணை டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுகள் டிசம்பர் 21-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://coe.annauniv.edu](https://coe.annauniv.edu) என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அரியர் தேர்வுகளை முடிக்க முடியாமல் தவித்து வந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை குறித்து திருமாவளவன் கடும் விமர்சனம்!

 

MUST READ