Homeசெய்திகள்தமிழ்நாடு"தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்"- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

“தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்”- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

-

 

"தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்"- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
Photo: TN Govt

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!

‘மிக்ஜாம்’ புயல் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், கடலூரில் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் தொடர்பாக, மீனவர்களுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் : 2 நாட்களில் 240 பேர் கொன்று குவிப்பு..

அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் புயல் முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மக்களைக் காக்க வேண்டிய நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம். புயல் காரணமாக, பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

MUST READ