spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது - பிரதமர் மோடி

திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது – பிரதமர் மோடி

-

- Advertisement -
"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
 

தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.

we-r-hiring

காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ