மதுரை: மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ். ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் தலைவர் எம்.எஸ். ஷா. இவர் பாஜகவின் பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா, 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தெற்கு வாசல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 15 வயது சிறுமியின் செல்போனுக்கு, பாஜக நிர்வாகி ஷா ஆபாச தகவல்கள் அனுப்பியது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது மதுரை தெற்கு வாசல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.