
2023 ஆம் ஆண்டிற்கான காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு மே 9- ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது, “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காகக் கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் மற்றும் காவலர்களை ஊக்குவிப்பதற்கென தமிழக முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அரசாணை எண் 411, நாள் கடந்த 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3- ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் இ.கா.ப., தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் இ.கா.ப., சேலம் உட்கோட்டம், இருப்புப் பாதை, காவல் துணைக் கண்காணிப்பாளர் மா.குணசேகரன், நாமக்கல் மாவட்டம், காவல் சார்பு ஆய்வாளர் சு.முருகன், நாமக்கல் மாவட்டம், முதல் நிலை காவலர் ரா.குமார் ஆகியோருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க் இ.கா.ப., காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை அவர்களின் சீரியப் பணியை அங்கீகரித்து அவர்களுக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த ‘சிறப்பு பதக்கம்’ தனி நேர்வாக வழங்கப்படவிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.