பல் புடுங்கிய விவகாரம்- காவல்துறை அதிகாரிகளுக்கு 2 நாட்களில் மீண்டும் பதவி
பல் பிடுங்கப்பட்டப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு இரண்டே நாட்களில் மீண்டும் பதவி வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக 3 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சம் இன்ஸ்பெக்டர், 2 கான்ஸ்டபிள்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு கடந்த 4 ஆம் தேதி மாற்றப்பட்டனர். இந்நிலையில் அடுத்த 2 நாட்களிலேயே இவர்கள் குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.