spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபடிப்படியாக மின்விநியோகம்....அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

படிப்படியாக மின்விநியோகம்….அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

-

- Advertisement -

 

படிப்படியாக மின்விநியோகம்....அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
File Photo

சென்னையில் மழைநீர் குறைந்து வரும் பகுதிகளில் மின் சேவை மீண்டும் வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையளவுக் குறைந்தாலும், காற்றின் வேகம் குறையாததால் படிப்படியாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

புயல், கனமழையால் பாதிப்பு- முதலமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

அதன்படி, தண்டையார்பேட்டை, ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்டப் பகுதிகளில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளம் செல்வதால் கரையோர மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கரையோரப் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் சிரமமின்றி மக்கள் தங்குவதற்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பணியாளர்களுக்கு ‘Work From Home’ வழங்க தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

இதனிடையே, கனமழை காரணமாக, நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பூந்தமல்லி- பட்டாபிராம் இடையே போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

MUST READ