Homeசெய்திகள்தமிழ்நாடு"மின்விநியோகம் சீராகிறது"- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

“மின்விநியோகம் சீராகிறது”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

-

 

"மின்விநியோகம் சீராகிறது"- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
Video Crop Image

வெள்ள பாதிப்பு சீரமைப்புப் பணிகள் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னையில் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. சென்னையில் மின்சார விநியோகம் படிப்படியாக சீரடைந்து வருகிறது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும்.

சென்னையில் இருந்து விலகிய ‘மிக்ஜாம்’ புயல்!

சென்னையில் நேற்று (டிச.04) 120 மெகாவாட் மின் நுகர்வு என்பது படிப்படியாக அதிகரிப்பது சீரடைவதையே காட்டுகிறது. சாலைகள் சீரமைப்பு, மின்விநியோகத்திற்கு முன்னுரிமை தந்து பணிகள் நடைபெறுகின்றன. மக்களின் பாதுகாப்புக் கருதியே மழைநீர் வடியாத இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ