spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இருந்து விலகிய 'மிக்ஜாம்' புயல்!

சென்னையில் இருந்து விலகிய ‘மிக்ஜாம்’ புயல்!

-

- Advertisement -

 

சென்னையில் இருந்து விலகிய 'மிக்ஜாம்' புயல்!
Video Crop Image

சென்னையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புயல் விலகிச் சென்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கி.மீ. தொலைவில் நகரும் மிக்ஜாம் புயல் நெல்லூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

we-r-hiring

மூன்றாவது முறையாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா!

‘மிக்ஜாம்’ புயலால் இரண்டு நாட்களாக வீடுகளில் முடங்கியிருந்த நிலையில் சென்னை சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. சென்னையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மழை இல்லாததால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தில் தத்தளித்த சென்னை நகரம், படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.

சென்னையில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மிக்ஜாம்’ புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ள நிலையில் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஈ.சி.ஆர். வழியாகச் செல்லக் கூடிய புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, ஈ.சி.ஆர். சாலை துண்டிக்கப்பட்டதால் சென்னை- புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மிக்ஜாம் புயல் எதிரொலி….. இரண்டாவது நாளாக இன்றும் திரையரங்குகள் இயங்காது!

சென்னை நகர சாலைகளில் மழைநீர் வடியத் தொடங்கிய நிலையில், பல இடங்களில் குப்பை கழிவுகள் தேக்கமடைந்துள்ளது. வெள்ளம் வடிந்த சாலைகளில் உடைந்த மரக்கிளைகள், இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன.

MUST READ