வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை பெரிய அளவில் உலுக்கி எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. இதன் விளைவாக போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வண்ணம் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படைக் குழுவினர் மீட்டெடுத்து முகாம்களின் தங்க வைத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை விட்டு விலகிய மிக்ஜாம் புயல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் இன்று முற்பகல் கரையை கடக்க இருக்கிறது. இதனால் ஓரிரு இடங்களில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் மக்கள் அவசியம் என்று வெளியே வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் சென்னை உள்ளிட்ட ஆண்டு மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நான்கு மாவட்டங்களிலும் இரண்டாவது நாளாக திரையரங்குகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -