Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!

“தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!

-

 

"தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுத் தேதிகளில் மாற்றம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

“போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. அதில், வேட்பு மனுத்தாக்கல், வாக்குப்பதிவு தேதி, வாக்கு எண்ணிக்கை, எத்தனை கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்த சூழலில், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இன்று (ஜன.09) காலை 11.30 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அப்போது அமைச்சர் கூறியதாவது, “தமிழகத்தில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை; தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக, பொதுத்தேர்வு தேதி பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை அறிவிக்கும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ