Homeசெய்திகள்தமிழ்நாடுபுரட்டாசி மாத பிரதோஷம் - சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

புரட்டாசி மாத பிரதோஷம் – சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

-

- Advertisement -

புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் மாதப்பிறப்பு, பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், சதுரகிரி கோயிலில் நடைபெறும் புரட்டாசி மாதப் பிறப்பு, பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் வரும் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளன.

'சதுரகிரி மலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை'- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
File Photo

மேலும், கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி கிடையாது என்றும், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.அதேபோல்  அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி செல்ல அனுமதி வழங்கப்படாது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ