spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“பிரதமரின் கண்களில் அந்த பயத்தைப் பார்த்தேன்” ராகுல்காந்திக்கு ஆதரவாக போஸ்டர்

“பிரதமரின் கண்களில் அந்த பயத்தைப் பார்த்தேன்” ராகுல்காந்திக்கு ஆதரவாக போஸ்டர்

-

- Advertisement -

“பிரதமரின் கண்களில் அந்த பயத்தைப் பார்த்தேன்” ராகுல்காந்திக்கு ஆதரவாக போஸ்டர்

திருப்பூரில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்” என்று காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Image

கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி, மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்து வைத்தது.

we-r-hiring

Image

இதனை தொடர்ந்து நேற்று ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு சென்றார். இதனை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருபூர் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தீப், திருப்பூரில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அதில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார். பிரதமரின் கண்களில் அந்த பயத்தைப் பார்த்தேன். அதானி விவகாரத்தை பற்றி நான் நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்பதற்காகவே பதவி நீக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

MUST READ