Homeசெய்திகள்தமிழ்நாடுவேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜிகாந்த் வாழ்த்து

வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜிகாந்த் வாழ்த்து

-

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்

புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தபின் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களும், முன்னாள் கவர்னர், திருமதி தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ