spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - அமைச்சர் கே என்.நேரு

பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு

-

- Advertisement -

பிசான சாகுபடிக்காக  நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து  அமைச்சர் கே என்.நேரு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் தண்ணீரை  திறந்து வைத்தனர்.

பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - சபாநாயகர் அப்பாவுநெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடக்குப்பச்சையாறு அணைக்கட்டு உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 34 அடி தண்ணீர் உள்ளது. பிசான பருவத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை திறக்க உத்தரவிட்டார்.

we-r-hiring

இதை தொடர்ந்து இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கே.என் நேரு, தமிழக சபாநாயகர் அப்பாவு,நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன்,  அப்துல் வகாப் ஆகியோர் வடக்குப் பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை பிசான பருவத்திற்காக திறந்து வைத்தனர்.

அணையிலிருந்து இன்று முதல் வரும் 2025 மார்ச் 31ம் தேதி வரை தினமும் 100 கன அடிக்கு மிகாமல் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், 9593 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசான வசதி பெறுகின்றன.

MUST READ