spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு!

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு!

-

- Advertisement -

 

சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு!

we-r-hiring

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன.21) தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!

இதில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இன்று (ஜன.20) மாலை 05.00 மணிக்கு சேலம் மாவட்டத்திற்கு வருகைத் தரவுள்ளனர்.

மாநாட்டையொட்டி, மாநாடு நடைபெறும் திடலில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 8,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டனர்.

நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி அசத்திய ஜப்பான்!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் மாநாடு என்பதால் தி.மு.க. இளைஞரணி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க.வினர் சேலம் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

அதேபோல், தேசிய அளவிலான தொலைக்காட்சிகள் மற்றும் தமிழக தொலைக்காட்சிகள் என அனைத்து தொலைக்காட்சிகளின் ஊடகவியலாளர்களும் தி.மு.க. மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர்.

MUST READ