Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் - சத்யபிரத சாகு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – சத்யபிரத சாகு

-

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 234 அறைகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன” என இவ்வாறு பேசினார்.

 

MUST READ