திருக்குவளையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுப் பரிமாறி, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்பர்; தி.மு.க. அரசு உயிர் கொடுத்துள்ளது. 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் உள்ள 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். காலை உணவுத் திட்டத்தால் என் மனம் நிறைந்து, மகிழ்கிறது.
‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!
கலைஞர் படித்த பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். எந்த காரணமும், கல்வி கற்கத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்டத் தலைவர்களின் தடத்தைப் பின்பற்றி நடக்கிறேன். பலரது மகிழ்ச்சிக்கு காரணமாக, நான் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கு பாடமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!
மதிய உணவுத் திட்டத்தை ஊட்டச்சத்துத் திட்டமாக மாற்றியவர் கலைஞர். காலை உணவுத் திட்டத்திற்கானது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு. காலை உணவுக் கிடைக்க வேண்டும், ஊட்டச்சத்து குறைபாடு இருக்கக் கூடாது, ரத்த சோகையைத் தவிர்க்க வேண்டும். உதவ யாரும் இல்லை என கலங்கும் மக்களுக்கு தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். இது துரோணாச்சாரியார் காலம் அல்ல; ஏகலைவன்கள் காலம்” எனத் தெரிவித்துள்ளார்.