spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பள்ளி மாணவர்களுக்கு ஷூ.....பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்..."- பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

“பள்ளி மாணவர்களுக்கு ஷூ…..பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்…”- பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

-

- Advertisement -

 

"பள்ளி மாணவர்களுக்கு ஷூ.....பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்..."- பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

we-r-hiring

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா, மாமன்ற கூட்டத்தில் இன்று (பிப்.21) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளனர்.

பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..

மாநகராட்சி பட்ஜெட்டில், “பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கான முதல்முறையாக பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். சென்னையில் உள்ள 8 நீர் நிலைகளை ரூபாய் 10 கோடி மதிப்பில் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் பெண்களுக்கு முதல்முறையாக உடற்பயிற்சிக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வார்டிற்கு ஒன்று என 200 வார்டுகளிலும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்க்களைப் பிடிக்க 7 வாகனங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களுக்கு கருத்தடைச் செய்ய ரூபாய் 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

‘பெண்களின் கதாபாத்திரம் வலிமையானதாக இருக்கும்’….. ரணம் படம் குறித்து வைபவ்!

தெருநாய்களை தடுப்பூசி செலுத்தும் வாகனங்களை கொள்முதல் செய்ய ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சி எல்லைகள் தொடங்கும் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்க ரூபாய் 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் உள்ள 208 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப்பள்ளிகளில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு, முதல் முறையாக 1 செட் ஷூ, 2 செட் Socks வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ