spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி... சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..

பிரபல நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி… சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள்..

-

- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் பெயரில், சமூக வலைதளத்தில் ஒருவர் போலிக்கணக்கை தொடங்கி பண மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறுது

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் படங்கள் நடித்திருந்தாலும், பாலிவுட்டில் தான் அவர் டாப் நடிகையாக உருவெடுத்தார். இந்தியில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்திருக்கிறார். அதில் பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. தமிழில் அஜித்குமார் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது முக்கிய வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார்.

we-r-hiring

 

 

இந்நிலையில், நடிகை வித்யா பாலன் பெயரில் போலி இமெயில், இன்ஸ்டா மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை ஒருவர் தொடங்கி இருக்கின்றனர். இதன் மூலம், சினிமா துறையைச் சேர்ந்த நபர்களை அனுகி, அவர்களிடம் சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி பணம் பறித்துள்ளனர். பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார். வித்யா பாலனின் நெருங்கிய நண்பர்களிடமும்அவர் போலி செய்திகள் அனுப்பி பணம் கேட்டு மோசடி செய்திருக்கிறார்.

இந்த செய்தி நடிகை வித்யாபாலனுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தினர். மேலும், அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்செய்தி பாலிவுட்திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ