Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி!

ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதி!

-

 

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
செந்தில் பாலாஜி கைது

புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணையை வெளியிட்டு அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 13- ஆம் தேதி வரை ஏழாவது முறையாக நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் ஏற்படவே, அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இருதய அறுவைச் சிகிச்சைச் செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து தெரிய வரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ