
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி உத்தரவுப் பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மம்மூட்டி நடிப்பில் டர்போ… ரிலீஸ் தேதி அறிவிப்பு…
தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன் வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜியின் மனு மீது ஏப்ரல் 17- ஆம் தேதி உத்தரவுப் பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜா
கடந்த 10 மாதங்களுக்குள் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.