Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!

-

 

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை.

திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!

வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 07) அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் அமலாக்கத்துறைக்கு கிடைத்த நிலையில், புழல் சிறைக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், புழல் சிறையின் அதிகாரிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து, புழல் சிறையிலேயே அமைச்சர் செந்தில் பாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, நேற்று இரவு 08.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காரில் அழைத்துக் கொண்டு, பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகமான சாஸ்திரிபவனிக்கு சென்றனர்.

அங்கு வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், விடிய, விடிய அடுக்கடுக்கான கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பியதாக தகவல் கூறுகின்றனர். சாஸ்திரி பவன் முழுவதும் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

சுமார் 55 நாட்களுக்கு பிறகு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ