Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், செந்தில் பாலாஜி சந்திப்பு!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், செந்தில் பாலாஜி சந்திப்பு!

-

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 15 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

இதனை தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் இருந்த வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு ஏராளமான திமுகவினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், சென்னையில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சந்தித்து பேசினார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில்பாலாஜி அவர்களுக்கு, உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும்,  471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் செந்தில்பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

MUST READ