
திருச்சியில் இன்று (அக்.23) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி நினைக்கிறது. அக்டோபர் 23- ஆம் தேதி முதல் அக்டோபர் 31- ஆம் தேதி வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தமிழக அரசு தடை உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

“ஆசிரியர் பணி வயது வரம்பு உயர்வு வரவேற்கத்தக்கது”- டாக்டர் ராமதாஸ் ட்வீட்!
அரசியல் கட்சித் தலைவரின் நினைவுத் தினத்தில் அரசால் இப்படி தடைப் போட முடியுமா? சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது. காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால், அவர்களையும் சாதி சங்கத்தின் தலைவராக மாற்றியிருப்பர். தியாகிகளை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுப்பட விடாமல் தடுக்கிறார்கள்.
ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்
தமிழகம் புண்ணிய பூமி; இங்கு ஆரியம்- திராவிடம் கிடையாது. இந்தியாவைப் பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.