திருவள்ளுர் அருகே கைலாயம் வாதியம் வாசிக்கும் 65 மதிக்கத்தக்க பெண்மணியை கோவில் பூசாரி தாக்கியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த வாசிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது.
நேற்று இரவு மகா சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது ஏராளமான பக்தர்கள் அதிக அளவில் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்று வந்தனர். கோவில் வளாகத்தில் சிவ தொண்டாற்றும் பக்தர்கள் கைலாய வாத்தியங்கள் வாசித்து வந்தனர்.
கோவிலில் இருந்த பூசாரி சிவா என்பவர் மற்றும் அவரது மகன் இருவரும் கைலாய வாத்தியம் வாசிக்கும் திருவள்ளூரை சேர்ந்த அமலாம்மள் என்று சொல்லக்கூடிய சிவனடியாரை கைலாய வாத்தியம் வாசிக்கக்கூடிய சிவனடியாரை ஆலயத்தில் இருந்து வெளியே போகச் சொன்னதாக கூறப்படுகிறது.
அவர்களை மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிவ பக்தர்கள் மற்றும் கைலாய வாத்தியம் வாசிக்கும் சிவனடியார்கள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென பூசாரி சிவா வாத்தியம் வாசிக்கும் ஒரு பெண்மணியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்மணி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.