spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு

ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு

-

- Advertisement -

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஆகஸ்ட் 02, 2024 வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02, 2024 வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது. அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் இரயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

வரும் சனி (27.07.2024) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28.07.2024) அன்று புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திக்குறிப்பின்படியே ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படுகிறது.

MUST READ