spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் - எஸ்.பி.வேலுமணி!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் – எஸ்.பி.வேலுமணி!

-

- Advertisement -

அதிகமாக பேசியதே அண்ணாமலைதான், அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி,வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாஜக மாநில தலைவராக, எல்.முருகனும், தமிழிசை சௌந்தரராஜனும் இருந்த வரை கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. பாஜக மாநில தலைவராக, அண்ணாமலை பதவியேற்ற பின், அதிமுக தலைவர்களை விமர்சித்ததாலயே பிரச்னை துவங்கியது. அதிகமாக பேசியதே அண்ணாமலைதான். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்.

அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்திருந்தால் லோக்சபா தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை.கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான்.

கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை தற்போது குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்.பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் என இவ்வாறு அவர் பேசினார்.

 

MUST READ