Homeசெய்திகள்தமிழ்நாடுவிளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

-

விளைநிலங்களை அழித்து என்எல்சி பணி தொடக்கம்- பொதுமக்கள் எதிர்ப்பு

கடலூர், வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் வடிகால் வாய்கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.

NLC

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் 2வது சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியது என்எல்சி. ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன்செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 20க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மூலம் விளைந்த நிலங்களில் சுரங்க விரிவாக்கத்திற்காக கால்வாய் வெட்டப்படுகிறது. அதற்கு அருகிலேயே விளைநிலங்களில் வேளாண் தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். என்எல்சி பணியை தடுக்க முடியாமலும் நிலத்தை காக்க முடியாமலும் விவசாயிகள் திகைத்துபோய் நிற்கின்றனர்.

Image

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

என்எல்சியின் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதற்கு எதிராக சேத்தியாதோப்பில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். என்எல்சி பணியை தடுக்க சென்ற பாமக கடலூர் மாவட்ட செயலாளர் செல்வ. மகேஷ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

MUST READ