Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்க முயற்சி

புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்க முயற்சி

-

புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்க முயற்சி

புதுச்சேரியில் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில் தெருவோர விளையாட்டுகள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

தெருவோர விளையாட்டுகளை ஆர்முடன் விளையாடிய சிறார்கள்

இதற்காக ஒரு மாத காலத்திற்கு பல்வேறு விளையாட்டுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக STREET PLAY என்ற பெயரில் பாரம்பரிய விளையாட்டுகளை வீதியில் விளையாடும் நிகழ்ச்சி, முத்துமாரியம்மன் கோயில் வீதியில் நேற்று நடைபெற்றது. பாண்டி விளையாட்டு, சில்லு விளையாட்டு, பல்லாங்குழி, சுட்டிக்கல், பம்பரம், கண்கட்டி விளையாட்டு, எட்டாம்கோடு, பல்லாங்குழி, குலை குலையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்தது, உடைந்த வளையல்கள் விளையாட்டு, சுங்கரக்காய் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை ஆர்வத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் இந்த முயற்சி அடுத்த தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்க ஊக்குவிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்கள் வீதியில் இறங்கி விளையாட முன்வர வேண்டும்”

பாரம்பரிய விளையாட்டுகளின் நுட்பங்கள் குறித்து, பெரியோர்கள், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தனர். தொலைந்துபோன விளையாட்டுகளை விளையாடுவது ஆனந்தமாக இருப்பதாகவும், அழிவின் விழிம்பிலிருந்து அவற்றை மீட்டெடுக்க இது போன்ற ஏற்பாடுகள் உதவுவதாகவும் அவர்கள் கூறினர். நான்கு சுவர்களுக்குள் கைகளில் செல்போனுடன் முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையை வீதியில் இறங்கி விளையாட வைத்திருப்பது அவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ