spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

-

- Advertisement -

 

11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!
File Photo

மதுரையில் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

we-r-hiring

“அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் மருத்துவர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும், மகப்பேறு சிகிச்சை, கர்ப்பிணி உயிரிழப்பு தொடர்பான தணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து மருத்துவர்களின் கருத்து மற்றும் தேவைகளைக் கேட்டறிய குழு அமைத்து, அறிக்கைப் பெறப்படும் எனவும் அமைச்சர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்று கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறைக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து, மகப்பேறு பிரிவில் மருத்துவர்களைப் பணிச் செய்ய விடாமல் தடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலரைப் பணியிட நீக்கம் செய்ய வேண்டும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவச் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

சுமார் 11 நாட்களாக நீடித்த போராட்டம், அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

MUST READ