spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

 

அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
File Photo

‘லியோ’ திரைப்படம் வெற்றிப் பெற வேண்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

we-r-hiring

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வரும் அக்.19- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத், நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று லியோ திரைப்படக் குழுவினருடன் லோகேஷ் கனகராஜ், அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்துச் சென்றார். நண்பர்களுடன் கைத்தடியுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவருக்கு தேவஸ்தானம் அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். இதனையடுத்து, கோயிலுக்கு வெளியே செய்தியாளர்கள் பேட்டியெடுக்க முயன்ற போது, “லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் சிறப்பாக நடந்தது” எனத் தெரிவித்தார்.

MUST READ