Homeசெய்திகள்தமிழ்நாடு+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் - மாணவன் தற்கொலை முயற்சி

+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் – மாணவன் தற்கொலை முயற்சி

-

செங்கம் அருகே +2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தனியார் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் - மாணவன் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் கோகுல் ராஜ்  தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை +2 பொதுத் தேர்வை மாணவ மாணவிகள் எழுதிய நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களுக்கு மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ள நிலையில் செங்கம் தனியார் பள்ளியில் பயின்ற மாணவன் 600க்கு 337 மதிப்பெண் எடுத்தாகவும் மொத்த மதிப்பெண் குறைந்துள்ள விரக்தியில் மாணவன் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

+2 பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் - மாணவன் தற்கொலை முயற்சி

இதனை கண்ட உறவினர்கள் மாணவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

MUST READ