Homeசெய்திகள்தமிழ்நாடுதியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

தியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

-

 

தியாகராய நகரில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!

மேம்பாலக் கட்டுமான காரணமாக தியாகராய நகரில் இன்று (ஏப்ரல் 27) முதல் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“அணைகளின் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை தியாகராய நகரில் மேட்லி சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலக் கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, இன்று (ஏப்ரல் 27) முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26- ஆம் தேதி வரை ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பேருந்துகள், மேம்பாலத்தின் அணுகு சாலை வழியாகச் சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, பர்கிட் சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி பேருந்துகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள், மூப்பாரப்பன் தெரு, மூஸா தெரு, தெற்கு தண்டபாணி தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

“மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சைதாப்பேட்டை, அண்ணாசாலையை அடைய, சிஐடி நகர் 3வது பிரதான சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். சிஐடி நகர் 1வது பிரதான சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் சாலைக்கு செல்ல கண்ணம்மாப்பேட்டை சந்திப்பு, வெங்கட் நாராயண் சாலை, நாகேஸ்வரன் ராவ் சாலையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ