spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

-

- Advertisement -

2025 – 26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து,பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளாா். 2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

we-r-hiring

தொழில் வளர்ச்சி & வேலைவாய்ப்பு, “9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் (காஞ்சிபுரம், மதுரை, விழுப்புரம், இராமநாதபுரம், கரூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி) ரூ.366 கோடி மதிப்பீட்டில் உருவாக்கம் – 17,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்”.

சுற்றுலா வளர்ச்சி,”சுற்றுலா கட்டமைப்பிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு. உதகை ரேஸ் கோர்ஸ் ரூ.70 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றம். நீலமலை பகுதியில் நறுமணப் பொருட்கள் தோட்டம், பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் உருவாக்கம்”.2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

மீன் பொருளாதாரம், “குமரி, நாகை, கடலூர், திருவாரூர் – மீன்பிடி இறங்குதளங்கள் மேம்பாடு. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்ப உதவித் தொகை ரூ.500 ஆக உயர்வு. மீன்பிடித் தடைக்காலத்திற்காக ரூ.381 கோடி மானிய நிதி ஒதுக்கீடு”.

கைத்தறி & நெசவு, “விசைத்தறி நவீனமயமாக்கம் – ரூ.50 கோடி. கைத்தறி துறைக்கு ரூ.1,980 கோடி நிதியுதவி. விலையில்லா வேட்டி/சேலை திட்டம் – ரூ.673 கோடி.

அரசுப் பணியாளர் வேலைவாய்ப்பு,” கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசு பணியாளர்கள் நியமனம்.40,000 புதிய பணியிடங்கள் நிரப்ப திட்டம்”.

கோயில்கள் & இந்து அறநிலையம்,”ரூ.7,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்கள் திருப்பணி – ரூ.125 கோடி.அன்னதான திட்டம் – தினசரி 1 லட்சம் பேர் பயனடைகின்றனர்”.

பொதுப் பணிகள் & வீட்டு வசதி,”வீட்டு வசதி துறை – ரூ.7,718 கோடி நிதியுதவி.பொதுப்பணித் துறை – ரூ.2,457 கோடி ஒதுக்கீடு.சென்னை – திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட நெடுஞ்சாலை – ரூ.2,100 கோடி.14 புதிய புறவழிச்சாலைகள் – ரூ.1,400 கோடி”.

கல்வி & நூலகங்கள்,”சேலம், கடலூர், நெல்லை – ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்.போட்டித் தேர்வு மாணவர்களுக்காக நூலகம் – 1 லட்சம் புத்தகங்கள், மாநாட்டு கூடம்.20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்/டேப்லெட் – ரூ.2,000 கோடி ஒதுக்கீடு”.2025-26 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

மகளிர் நலம் & சமூக முன்னேற்றம்,”பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு – 1% கட்டண சலுகை.1 லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் – ரூ.225 கோடி.அரசு ஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு மீண்டும் செயல்பாடு – 9 லட்சம் பேர் பயனடைவார்கள்”.

நிதி நிலை & வருவாய்,”தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் – ரூ.2.4 லட்சம் கோடியாக உயர்வு.வருவாய் பற்றாக்குறை – 3.2%ல் இருந்து 1.17% ஆக குறைவு.ஒன்றிய அரசின் நிதியுதவி குறைவு – தேசிய பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு 9%, ஆனால் வெறும் 4% மட்டுமே வழங்கப்படுகிறது.மொத்தம் நிதி அமைச்சர் 2.33 மணி நேர உரையில், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை அடங்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொது நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், மீன் பொருளாதாரம், கல்வி, மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு கணிசமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பட்ஜெட்: நாணய லோகோ மாற்றம்: சட்டம் சொல்வதென்ன..?

MUST READ