Homeசெய்திகள்தமிழ்நாடு1000 புதிய பேருந்துகள் கொள்முதல் - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு ...

1000 புதிய பேருந்துகள் கொள்முதல் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு Tamil Nadu Govt. to buy 1000 new buses – Transport minister

-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதைத் தொடர்ந்து 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்தார்.

1000 புதிய பேருந்துகள் கொள்முதல் - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
Tamil Nadu Govt. to buy 1000 new buses - Transport minister

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கரன், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்தார்.

விரைவில் 500 மின்சார பேருந்துகள்

விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், தொடர்ந்து 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அதில் 100 பேருந்துகள் சென்னை மாநகரின் சேவைக்காக விடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 40 சதவீதமாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தால் பணிக்கு செல்லும் பெண்கள் அதிகளவில் பயன்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வழிதடங்களில் உரிய நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பதனை பொதும்மக்கள் சென்னை பஸ் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறைஅமைச்சர் சிவசங்கரன் கூறினார்.

MUST READ