- Advertisement -
கலைஞருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கலைஞர், திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாக திகழ்ந்தவர் கலைஞர் எனவும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கலைஞர் சாம்பியன்; கலைஞருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளாா்.
ஆவடி: வீடு வாடகைக்கு எனக் கூறி, பல லட்சம் ரூபாய் நுதன மோசடி…


