Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க உத்தரவு!

-

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!
File Photo

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

டெல்லியில் இன்று (செப்.29) மதியம் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா அரசுகளின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரின்றி கருவது குறித்து தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி. அளவிற்கு தண்ணீர் இருப்பதால், தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

இதையடுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை உத்தரவாகப் பிறப்பித்த காவிரி மேலாண்மை ஆணையம், வரும் அக்டோபர் 15- ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகா முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ