
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) காலை 11.00 மணிக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., இன்று பணி ஓய்வுப் பெறுவதையொட்டி, தமிழக முதலமைசச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்து பணிப் பாராட்டு கடிதத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
அதேபோல், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., இன்று (ஜூன் 30) பணி ஓய்வுப் பெறுவதையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்தும், பணிப் பாராட்டு கடிதத்தையும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்- முத்தரசன்
தமிழக காவல்துறை டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.