
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பொதுக் கலந்தாய்வில் கலந்துக்கொண்டு இடங்களை தேர்வு செய்த ஆசிரியர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் – தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு


கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு ஜூலை 9 முதல் 11 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஒன்றியம் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவகர்களால் பரிசீலிக்கப்பட வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ ….. தயாராகும் ட்ரெய்லர்!
இரண்டு ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுவோர் விண்ணப்பிக்க இயலாது என்றும், மனமொத்த மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் இரு ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்றிய மற்றும் கல்வி மாவட்டத்திற்குள்ளான மனமொத்த மாறுதல் ஆகஸ்ட் 1ம் தேதியும், வருவாய் மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு இடையான மனமொத்த மாறுதல் ஆகஸ்ட் 2ம் தேதியும் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


